அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 18 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil
அபிராமி அந்தாதி
பேரின்ப நிலையடைய
பேரின்ப நிலையடைய
பாடல் - 19
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுள்ளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
பொருள்
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்தேன் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை கருத்தினுள்ளே -
தாயே அபிராமி தாயே
எளியவனான நானும் வெளிப்படையாய் காணும் நின்ற உன் திவ்ய திருமேனியை புறத்தே கண்டு கண்களிலும் அகத்தே கண்டு உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கி ஏற்பட்ட இன்ப வெள்ளத்துக்கு கரை காண இயலவில்லை எளியவனாகிய
என் உள்ளத்தின் உள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுள்ளமோ
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே -
தெளிந்த மெய்ஞானம் விளங்கும்படி இத்தகைய பேரருளை செய்த உன் திருவுள்ளக் குறிப்பின் காரணம் உன் திருவுள்ளக் குறிப்பின் காரணம் தான் யாதோ ஒளி பொருந்தி திகழும் நவ கோணங்களை ஏற்று விரும்பி தங்கியுள்ள அபிராமி தாயே அன்னையே போற்றி போற்றி போற்றி எங்களை காத்தருள்வாயாக பேரின்ப நிலை அடைய இப்பாடலை பாடவும்
பேரின்ப நிலையடைய இப்பாடலைப் பாடவும்
தாயே நீயே துணை அம்மா
Comments
Post a Comment