அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 18 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

மரண பயம் நீங்க 

அபிராமி அந்தாதியில் பதினெட்டாவது பாடலாக மரண பயம் நீங்க  அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

மரண பயம் நீங்க 

 

பாடல் - 18

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து 
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே 



பொருள்


அன்னையே உன்னால் கவரப்பட்ட இடப்பாகத்தை உடைய சிவனும் நீயும் இணைந்து மகிழ்ந்து நின்றிருக்கும் அர்த்தநாதீஸ்வர திருக்கோலமும் உங்கள் இருவரின் திருமணக் கோலமும்.என் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த ஆணவத்தை அகற்றிவிட்டது என் உள்ளத்தில் இருந்த அகந்தையைப் போக்கி ஆண்டுகொண்ட பொலிவு பெற்ற திருவடிவமாகி நீ எழுந்தருளி வந்து கொடுமையான காலன் உயிரைக் கொள்ள என்னை நோக்கி வரும்போது கண்முன் தோன்றி அவனால் வரும் எத்தகைய துன்பத்தையும் போக்கி என்னை காத்தருள வேண்டும் அம்மா வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே அவ்வியின் தீர்த்தன்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே.

 

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் 
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து 
வெவ்விய காலன் என்மேல் வரும்போது வெளிநிற்கவே 

அபிராமி தாயே அன்னையே போற்றி போற்றி போற்றி 

 

எங்களை காத்தருள்வாயாக 
  

மரண பயம் நீங்க இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
 
தாயே போற்றி 

Comments