அபிராமி அந்தாதி பாடல் 9 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

அனைத்தும் வசமாக

அபிராமி அந்தாதியில் ஒன்பதாவது பாடலாக அனைத்தும் வசமாக அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

அனைத்தும் வசமாக

பாடல் - 9

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே


பொருள்

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர் - 

தாயே அன்னையே என் தந்தையான சிவபெருமானின் நினைவில் நீங்காது நிற்பனவும். திருவிழிகளில் காட்சி தருவனவும். அழகிய பொன்மலையாம் மேருமலை மேருவைப் போல பருத்தனவும். அழுத பிள்ளையான ஞானசம்பந்தப்
பெருமானுக்கு பாலூட்டியதுமான .
 
 
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும் - 

திருத்தணங்களும் அவற்றின் மேல் உள்ள முத்து மாலையும் சிவந்த திருக்கரத்தில் உள்ள கரும்பும் வில்லும் மலர் அம்புகளும்.
 
 
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே - 

மயில் இறகினால் அடிப்பாகம் போன்ற அழகிய புன்னகையும் தேவியாகிய நின் பூரண திருக்கோலமும் என் முன் நின்று காட்சியை அருளுக.

அனைத்தும் வசமாக இப்பாடலை பாடவும்
 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
தாயே போற்றி


Comments