அபிராமி அந்தாதி பாடல் 8 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

அபிராமி அந்தாதியில் எட்டாவது பாடலாக பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட என்ற இப்பாடலை அபிராமி பட்டர்  இயற்றியுள்ளார்.

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

பாடல் - 8

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே


பொருள்

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி, சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் - 

பாசமாம் தலைகளை எல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூரி நிறம் கொண்டவளே மகிடன் என்னும் அரசனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி நீல நிறம் கொண்டவளே.
 
 
அந்தரி நீலி அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே - 

 என்றும் அழிவில்லாத இளம் கன்னியான தாயே பிரம்மதேவனின் கபாலத்தை தாங்கும் திருக்கரத்தை கொண்டவளாகிய அன்னையே ! அபிராமி அன்னையே ! தாமரை மலரை போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில்
என்றென்றும் பொருத்தி நிற்கின்றன என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே ! அன்னையே ! பேரழகு மிக்க தாயே ! உன்னை வணங்குகின்றோம் .

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட இப்பாடலை பாடவும்.
 

தாயே நீயே துணை அம்மா 

அன்னையே போற்றி 
 
தாயே போற்றி

Comments