அபிராமி அந்தாதி பாடல் 7 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

மலையென வரும் துன்பம் பனியென நீங்க

அபிராமி அந்தாதியில் ஏழாவது பாடலாக மலைபோல் வரும் துன்பம் பனி போல் விலக அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

மலைபோல் வரும் துன்பம் பனி போல் விலக

பாடல் - 7

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானை சுந்தரியே


பொருள்

ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் - 
மத்தை வைத்து தயிரை கடைவார்கள் மத்து தயிருக்கு இடையில் இருக்கும். தயிரில் இருந்து சுழலும் மத்தை போல ஒரு உயிர் பிறப்பு இறப்புகளுக்கு இடையே(ஒரு உயிர் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே) சுழல்கிறது தளர்ச்சி இல்லாததாகிய ஒரு நல்ல நிலையை அடையும் வண்ணம் திருவுள்ளத்தில் கொண்டருள வேண்டும்.

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானை சுந்தரியே - 
தாமரையை தன் இருக்கையாகக் கொண்ட பிரம்மனும் சந்திரனை தன் சடா பாரத்தை தன் தலையில் வைத்துள்ள உன்னுடைய கணவனும் ஆகிய சிவனும், திருமாலும், வணங்கி எப்பொழுதும் துதி செய்கின்ற செம்மையான திருவடிகளை உடையவளே அன்னையே! செவ்வண்ண திலகம் அணிந்த நெற்றி உள்ள பேரழகியே ! அன்னையே!  பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல் ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடைய எனக்கு அருள்வாயாக.

மலைபோல் வரும் துன்பம் பனி போல் விலக  இப்பாடலை பாடவும்.
 

கஷ்டங்கள் நீங்க தேவி பக்திபாடல்.

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
தாயே போற்றி

Comments