அபிராமி அந்தாதி பாடல் வரிகள் 16 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

முக்காலமும் உணரும் திறன் உண்டாக

அபிராமி அந்தாதியில் பதினாறாவது பாடலாக முக்காலமும் உணரும் திறன் உண்டாக அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

முக்காலமும் உணரும் திறன் உண்டாக

 

பாடல் - 16

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா 
வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அழியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே


பொருள்

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் 
ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா  - 

கிளிபோன்ற தேவியே அன்னையே உற்றாராகிய அடியவர் மனங்களில் நிலைபெற்று விளங்கும். ஞான ஒளியே விளங்கும் பிற ஒளிகளுக்கெல்லாம் ஆதாரமான பொருளே 

 

வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே
அழியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே  - 

விண் முதலிய ஐம்பெரும் பூதங்களுமாகி விரிந்த தாயே எண்ணி பார்த்திடாத வண்ணம் எல்லை கடந்து நின்ற பரவு வெளியே இத்துனை சிறப்பு மிக்கவளான நீ
இரக்கத்திற்குரிய அடியவனான என் சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டது வியப்புக்குரிய தான் தாயே 

 

முக்காலமும் உணரும் திறன் உண்டாக இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
 
தாயே போற்றி 

Comments