அபிராமி அந்தாதி பாடல் 15 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

பெரும் செல்வமும் பேரின்பமும் பெற

அபிராமி அந்தாதியில் பதினைந்தாவது பாடலாக தலைமை பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.
 

பெரும் செல்வமும் பேரின்பமும் பெற

 

பாடல் - 15

தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம் 
விண் அளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடுமன்றோ 
பண்ணளிக்கும் சொற்பரிமள யாமளைப் பைங்கிலியே 


பொருள்

தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார் -

அன்னையே உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவியில் பல கோடி தவங்களை செய்தவர்கள் .

 

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம் - 

இவ்வுலகைக் காக்கும் அரச போகத்தை மட்டும்தானா பெறுவர் .


 

 விண் அளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடுமன்றோ  -

யாவரும் மதிக்கும் தேவர்களுக்கே உரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சமும் வீட்டையும் அன்றோ 

 

பண்ணளிக்கும் சொற்பரிமள யாமளைப் பைங்கிலியே - 

பெற்று மகிழ்வார் அழகிய பண்ணை போன்று இனிய மொழிகளை பேசும் நறுமணம் கமலும் திருமேனியை உடைய யாமலையாகிய பசுங்கிளியே அன்னையே அருள்வாயாக.


 பெரும் செல்வமும் பேரின்பமும் பெற  இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 
 
 
அன்னையே போற்றி 
 
 
தாயே போற்றி 

Comments