அபிராமி அந்தாதி பாடல் 14 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

 

அபிராமி அந்தாதி 

தலைமை பெற

அபிராமி அந்தாதியில் பதினான்காவது பாடலாக தலைமை பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

தலைமை பெற

 

பாடல் - 14

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்
சித்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சித்தையுள்ளே,
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே


பொருள்

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்
சித்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சித்தையுள்ளே  - 

எம்பெருமாட்டியே! அன்னையே என் தலைவியான அபிராமி அன்னையே தேவர்கள், அசுரர்கள் ஆகிய அவ்வளவு பெரிய ஆற்றல் உடையவர்கள்
உன்னை வழிபடுகிறார்கள். பிரம்மதேவரும் திருமாளும் உன்னை எண்ணி தியானம் செய்கின்றனர்.  

 

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே  - 

சிவபெருமானோ தம் உள்ளத்தின் உள்ளே உன்னை அன்பினால் கட்டி
வைத்திருப்பவர். இவ்வளவு சிறப்புடைய உன் குளிர்ந்த அருளானது உலகத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு எளிதாகவே இருக்கிறதே. இது என்ன வியப்பு தாயே! 

 

 தலைமை பெற இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
தாயே போற்றி 

Comments