அபிராமி அந்தாதி பாடல் 13 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

 

அபிராமி அந்தாதி 

வைராக்கிய நிலை எய்த

அபிராமி அந்தாதியில் பதின்மூன்றாவது பாடலாக வைராக்கிய நிலை எய்த அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

வைராக்கிய நிலை எய்த

 பாடல் - 13

பூத்தவளே புவனம் பதினான்கையும்: பக்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதேர்

பொருள்

பூத்தவளே புவனம் பதினான்கையும்: பக்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு -  

ஈரேல் உலகங்களையும் திருவருளால் ஈன்றதுடன் பாதுகாப்பவளும் சம்காரம் செய்பவளுமான தாயே! அன்னையே! உன்னை வணங்குகின்றோம்! 

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதேர் - 

நஞ்சினை கண்டத்தில் கொண்ட நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தவளே!
தாயே! என்றுமே முப்பறியாத திருமாளின் தங்கையே! அன்னையே! பெரும் தவத்தை உடையவளே தாயே! அன்னையே! நான் உன்னையே தெய்வமாக ஏற்று வழிபடுவதைத் தவிர இன்னொரு தெய்வத்தை வழிபட என்னால் இயலுமோ அன்னையே!


அருள் செய்வாயாக தாயே எங்களை காப்பாயாக 

 

வைராக்கிய நிலை எய்த இப்பாடலை பாடவும்

 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
தாயே போற்றி 

Comments