அபிராமி அந்தாதி பாடல் 12 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

 

அபிராமி அந்தாதி 

தியானத்தில் நிலைபெற

அபிராமி அந்தாதியில் பனிரெண்டாவது பாடலாக தியானத்தில் நிலைபெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

தியானத்தில் நிலைபெற

 

பாடல் - 12

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசித்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூக்கவளே


பொருள்

கண்ணியது உன்புகழ் கற்பது உன் நாமம் கசித்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில், பகல் இரவா - 
 
அன்னையே! தாயே! நான் அள்ளும் பகலும் கருதுவதெல்லாம் உன் புகழ் கற்பதெல்லாம் உன் திருநாமம்! எந்நேரமும் என் உள்ளம் உருக பிரார்த்திப்பது உன் இரு திருவடித் தாமரைகளைத்தான் .
 
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூக்கவளே - 
 
நான் கலந்து கொண்டு உன்னை வணங்குவதெல்லாம் உன்னை மெய்யாகவே விரும்பித் தொழும் அடியவர்களின் கூட்டத்தில்தான் இவ்வளவுக்கும் காரணமான நான் முற்பிறவியில் செய்த புண்ணியம் ஏதோ என்று அறியேன் என் அன்னையே! உலகங்கள் ஏழையும் பெற்ற தாயே!  இரட்சிப்பாயாக! 
 
 
 தியானத்தில் நிலைபெற இப்பாடலை பாடவும்

 
தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
 
தாயே போற்றி 

Comments