அபிராமி அந்தாதி பாடல் 11 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

அபிராமி அந்தாதியில் பதினொன்னாவது பாடலாக இல்வாழ்க்கையில் இன்பம் பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

 

பாடல் - 11

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளதிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே


பொருள்

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய் - 

ஆனந்த உருவாகிய அன்னையே! என் அறிவாகி நிரம்பிய அமுதம் போன்றவளாகிய அன்னையே!  

 வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் - 

வானம் இறுதியாய் உள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது

 தான் அந்தமான சரணார விந்தம் தவளதிறக் 

கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே -  

வெண்ணிற சாம்பல் படர்ந்த மயாணத்தை தம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் உள்ளது. 

இல்வாழ்க்கையில் இன்பம் பெற இப்பாடலை பாடவும்
 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
 
தாயே போற்றி 
  

Comments