அபிராமி அந்தாதி பாடல் 10 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

மோட்ச சாதனம் பெற

அபிராமி அந்தாதியில் பத்தாவது பாடலாக மோட்ச சாதனம் பெற அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

மோட்ச சாதனம் பெற

 

பாடல் - 10

நின்றும் இருந்தும் இடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!


பொருள்

நின்றும் இருந்தும் இடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின் -

நான் நின்றவாறும், இருந்தவாறும், படுத்தவாறும், நடந்தவாறும் தியானம்
செய்வதும் உன்னைத்தான் தாயே! என்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னுடைய திருவடி
தாமரையைத்தான் அன்னையே !


ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந்தக்கூடிய அரும்பொருளாயும் சிவபெருமானின் திருவருள்
வடிவமுமாய் விளங்கும் உமை அன்னையே !
நான் என்றும் மறவாமல் வழிபடுவது உன்னுடைய திருவடி தாமரையைத்தான் அன்னையே! அன்னையே! போற்றி !


மோட்ச பதவி அடைய இப்பாடலை பாடவும்
 
மோட்ச சாதனம் பெற, மோட்ச பதவி அடைய,மோட்சம் மந்திரம்.
 

தாயே நீயே துணை அம்மா 


அன்னையே போற்றி 
தாயே போற்றி 
  

Comments