அபிராமி அந்தாதி கணபதி காப்பு - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

விநாயகரை வணங்கிய பிறகு தான் எந்த ஒரு காரியத்தையும் தொடங்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த விஷயத்தில், காரியத்தில் நமக்கு வெற்றி கிடைக்கும்.அபிராமி அந்தாதியின் முதல் பாடலான காப்புப் பகுதி, கணபதியைப் போற்றித் தொடங்குகிறது. எப்பொழுதும் எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்கும் போது முதல் வணக்கம் விநாயகருக்கு.
இந்தக் காப்புப் பாடல், அபிராமி அந்தாதியைப் படிப்பதற்கு முன், கணபதியின் அருளையும், அறிவையும் பெறுவதற்காக எழுதப்பட்டதாகும்.
 

கணபதி   காப்பு  

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை 
ஊரார்தம் பாகத்து உமை மைந்தனே! உலகேழும் பெற்ற 
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே! 
கார் அமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே
 
 

 பொருள்


தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும்  - கொன்றை மாலை, சண்பக மாலை இரண்டையும் சாத்தும்  

தில்லை ஊரார்தம் பாகத்து உமை மைந்தனே- தில்லை ஊராரின் பாகமாக இருக்கும் உமை மைந்தனாகிய விநாயகரே

உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி - உலகங்கள் அனைத்தையும் பெற்ற சீரையும், பெருமையையும் கொண்ட அபிராமி அந்தாதியின் பாடல்கள் 

எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே! - எப்போதும் என் சிந்தையில் இருக்கட்டும்

கார் அமர் மேனிக் கணபதியே! - மேகம் போன்ற கருமையான நிறத்தைக் கொண்ட கணபதியே! 

நிற்கக் கட்டுரையே - உங்கள் பெருமை நிற்கவும், நீங்கள் என் சிந்தனையில் தங்கி இருக்கவும் வேண்டுகிறேன். 

 
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி அம்பிகையை பற்றி ஒரு அற்புதமான பாடல் தொகுப்பு. இதை எழுதியவர் அம்பிகையை நேரில் தரிசித்த அபிராமி பட்டர். இவரது பெயரை சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது அபிராமி அந்தாதி தான்.100 பாடல்களைக் கொண்டது அபிராமி அந்தாதி.எளிமையாக பொருள் புரியும் வண்ணம் ஒரு ஒரு பாடலையும் இயற்றியுள்ளார் அபிராமி  பட்டர்.
 
 
அபிராமி அந்தாதி பாராயணம்,  அபிராமி அந்தாதி  பாடல், அபிராமி அந்தாதி 100 பாடல்கள், அபிராமி பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகம்,திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம்,அபிராமி பதிகம் விளக்கத்துடன் 

Comments