அபிராமி அந்தாதி
உயர்பதவிகளை அடைய
அபிராமி அந்தாதியில் நான்காவது பாடலாக உயர்பதவிகளை அடைய பற்றி அபிராமி பட்டர் பாடல் இயற்றியுள்ளார்.
உயர்பதவிகளை அடைய
பாடல் - 4
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
பொருள்
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி -
மனிதர்களும் தேவர்களும் சாகாத வரம் பெற்ற முனிவர்களும் வந்து தலை வணங்கி வழிபடும் செம்மையான திருவடிகளை உடைய அபிராமி அன்னை தாயாரை
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் -
அகமும் புறமும் மென்மையாக உடைய அபிராமி அன்னை தாயாரே கொன்றை மலரை அணிந்த நீண்ட சடையின் மேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த -
பணியை உண்டாக்கும் சந்திரனையும் பாம்பையும் கங்கையையும் யேந்தி அருளும் சிவபெருமானும்
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே -
நீயும் யென் அறிவுடன் யேன் நாளும் மாறாது இணைந்திருக்க வேண்டுகிறேன்
தாயே நீயே துணை அம்மா
தாயே நீயே துணை அம்மா
அன்னையே போற்றி
தாயே போற்றி
Comments
Post a Comment