அபிராமி அந்தாதி
முதல் பாடல்
ஞானமும் நல்வித்தையும் பெற
பாடல் – 1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துதுணையே!
பொருள்
உதிக்கின்ற செங்கதிர் - காலையில் உதிக்கின்ற சூரியன், செங்கதிர்களை வீசும் சூரியனே
உச்சித் திலகம் - மங்கையை நெற்றியில் வைத்துக் கொள்ளும் குங்குமம் உச்சித்திலகம்
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் - அறிவுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்
மாதுளம் போது - மாதுளம் பூ
மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி - தாமரை மலரில் உள்ள திருமகள் துதி செய்கின்ற மின்னல் கொடி
மென்கடிக் குங்குமத் தோயமென்ன - மெல்லிய நறுமணம் உடைய குங்குமக் கலவை
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துதுணையே! - இப்படி அன்பர்கள் தொன்றுதொட்டு உவமையாக போற்றப்படுகின்ற திருமேனியை உடைய அபிராமி அன்னையே எனக்கு சிறந்த மேலான துணை ஆவாள்
பாடல் – 1
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துதுணையே!
அபிராமி பட்டர் பெயரை சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது அபிராமி அந்தாதி தான்.100 பாடல்களைக் கொண்டது திருக்கடவூர் அபிராமி அம்மை திருப்பதிகம்.
அன்னையே போற்றி தாயே போற்றி அன்னையே எங்களை காத்திருவாயாக!!!
அபிராமி அந்தாதி பாராயணம், அபிராமி அந்தாதி பாடல், அபிராமி அந்தாதி 100
பாடல்கள், அபிராமி பட்டர் அருளிய அபிராமியம்மை பதிகம்,திருக்கடவூர் அபிராமி
அம்மை திருப்பதிகம்,அபிராமி பதிகம் விளக்கத்துடன்
Comments
Post a Comment