அபிராமி அந்தாதி பாடல் 5 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

மனக்கவலை தீர

அபிராமி அந்தாதியில் ஐந்தாவது பாடலாக மனக்கவலை தீர அபிராமி பட்டர் இப்பாடலை இயற்றியுள்ளார்.

மனக்கவலை தீர




பாடல் - 5

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே

பொருள்

பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்     -  
சேர்ந்து பொருந்திய திரிபுரத்தில் தலைவியானவளே அபிராமி அன்னையே செப்பை உவமையாக சொல்லும் இரண்டு தனங்களின் பாரம் தாங்காது.
 
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி வார்சடையோன் -
வருந்தும் வஞ்சிக் கொடி போன்ற மெல்லிய இடையுடைய மனோன்மணி தாயே நீண்ட சடையை உடைய சிவபெருமான்.

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல் - 
அருந்திய ஆலகால விஷத்தை தன் கையால் கழுத்தளவு நிற்கச் செய்து அமுதம் போல் ஆக்கிய தாயே தாமரையின் மேல் அழகாக வீற்றிருந்து அருள் புரியும் பேரழகியே பிரகாசமான வடிவாகியவள.
 
திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே - 
அபிராமி அன்னையே உன் திருவடியை தால் பணிந்தேன்உன் திருவடி என் தலை மேல் உள்ளது.



தாயே நீயே துணை அம்மா 
அன்னையே போற்றி 
தாயே போற்றி




Comments