அபிராமி அந்தாதி பாடல் 3 - Abhirami Anthathi Lyrics in Tamil, Abirami Andhathi Meaning in Tamil

 

அபிராமி அந்தாதி 

குடும்பக்கவலையிலிருந்து விடுபட

அபிராமி அந்தாதியில் மூன்றாவது பாடலாக குடும்ப கவலையில் இருந்து விடுபடுவது பற்றி அபிராமி பட்டர் பாடல் இயற்றியுள்ளார்.

குடும்பக்கவலையிலிருந்து விடுபட



பாடல் - 3

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

பொருள்

அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு    -  
திருமகளாக இருக்கும் அன்னையே வேறு யாரும் அறியாத இயலாத ரகசியத்தை அடியேன் அறிந்தேன்

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப் - 
அதன் காரணமாக உன் திருவடிகளை அடைந்தேன் உனது திருவடிகளை புகலிடமாக சேர்ந்தேன்

பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் - 
நின்னுடைய அடியார்களின் பெருமை என்னாது பாவமிக்க மனம் காரணமாக குப்பர விளும் நரகலோகத்தில் தொடர்புடைய மனிதர்களை அஞ்சி விலகினேன்

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே - 
உன் அடியார்களின் பெருமை உணர்த்த தவறிய நெஞ்சத்தின் காரணமாக நரக லோகத்தில் தொடர்புடைய மனிதர்களை கண்டு அஞ்சி விலகிக் கொண்டேன்
இனி நீயே எனக்கு துணை அம்மா

தாயே நீயே துணை அம்மா 
அன்னையே போற்றி 
தாயே போற்றி


Comments