அபிராமி அந்தாதி
பிரிந்தவர் ஒன்று சேர
பாடல் - 2
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்
கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே
பிரிந்தவர் ஒன்று சேர
பொருள்
துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் - அன்னைதிரிபுரசுந்தரியே எங்களுக்கு உயிர் துணையும் நாங்கள் தொழுகின்ற தெய்வமும் எம்மையெல்லாம் ஈன்றெடுத்த அன்னையும்
சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் - வேதம் என்னும் விருட்சத்தின் கிளையும் அதன் முடிவிலுள்ள கொழுந்தும் கீழே பரவி பதிந்துள்ள அதன் வேறும்
பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் - குளிர்ச்சி பொருந்தியவையான குளிர்ந்த மலராகிய பொழிவு பெற்ற மலர் அம்புகளும் கரும்பு வில்லும் மென்மையான பாசாங்கு சமமும்
கையில் அணையும் திரிபுரசுந்தரி ஆவது அறிந்தனமே - நான்கு திருக்கரங்களில் ஏந்தி திரிபுரசுந்தரியாக அமர்ந்து தியானத்திற்கு ஏற்று திருவுருவம் படைத்த பெருமாட்டியே சப்த பிரபஞ்சத்தின் ஆதியாக வேத சொரூபி யாக விளங்குகிறார்.
அவளே எனக்கு எப்பொழுதும் எவ்விடத்திலும் துணையாக இருக்கிறாள்.
நான் தொழும் தெய்வமாகவும் இருக்கிறாள் எண்ணையும் பிற உயிர்களையும் பெற்ற தாயாகவும் விளங்குகிறாள் .
அன்னையே போற்றி தாயே போற்றி
பிரிந்தவர்கள் ஒன்று சேரை பாடலை பாடவும்
விரைவில் பிரிந்தவர்கள் ஒன்று சேர்த்து விடுவார்கள்
பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்
பிரிந்த உறவுகள் தேடி வர
பிரிந்தவர் ஒன்று சேர இப்பாடல்
Comments
Post a Comment